விமான நிலையத்தில் உரிமையாளர் விட்டு சென்றுவிட்டதால், உணவு சாப்பிடாமல் ஒரு நாய் தன்னுடைய உயிரை போக்கிக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பியாவில் உள்ள புகாரமங்க விமான நிலையத்தில்தான் இந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு, அந்த விமான நிலையத்தில் ‘நியூப் விஜிரா’ என அழைக்கப்படும் 2 வயது நாயை விட்டு விட்டு ஒருவர் சென்றுவிட்டார். தனது எஜமான் வந்து தன்னை அழைத்து செல்வார் என கடந்த ஒரு மாதமாக அந்த நாய் விமான நிலையத்தையே சுற்றி சுற்றி வந்தது. ஆனால், நாயின் உரிமையாளர் வரவில்லை
இதனால் சோகமாக காணப்பட்ட அந்த நாய், அங்கிருந்தவர்கள் உணவு கொடுத்தும் எதையும் உண்ணாமல் பட்டினி கிடந்தது. இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் நிற்க கூட முடியாத நிலைக்கு அதன் உடல்நிலை பலகீனமானது

இதுகுறித்து விலங்கு நல மீட்பு குழுவிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அந்த நாயை மீட்டு சிகிச்சை அளித்தனர். ஆனாலும், சிகிச்சை பலனிறி அந்த நாய் பரிதாபமாக இறந்தது.
நாய் பாசமானது மற்றும் நன்றியுள்ளது என்பதை நிரூபித்த விஜிராவின் மரணம் அந்த விமான நிலைய ஊழியர்களை சோகத்தில் ஆழ்த்தியது
0 comments:
Post a Comment