இந்தியாவில் தற்போது அதிக அளவில் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி நிரந்தர விலை குறைப்பை அறிவித்துள்ளது.
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_tzA_2PD_GEnAV5M0GsB80cqTGjkTRaqIcuEAgBZzPfFcDV4q_VwlqSjSp73anTuNQWbqNvEjmfEFKns6osm0SEpKeT8m4ykg0x1moPcYtritp015d_W0hMOtxxAsU6xosUnihe1J4u0XCyfkvaqR-yG-Oqnpf7=s0-d)
அதாவது, ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் விலை நிரந்தரமாக குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. ரெட்மி நோட் 4 விலை இந்தியாவில் ரூ.9,999 முதல் துவங்குகிறது.
தற்போது ரெட்மி நோட் 4 விலையில் ரூ.1,000 நிரந்தரமாக குறைக்கப்படுகிரது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை குறைப்பு மூலம் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மாடல் ரூ.9,999, 4 ஜிபி ரேம் மாடல் ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு பிளிப்கார்ட் மற்றும் Mi.com தளங்களில் கிடைக்கும்.
0 comments:
Post a Comment