நலமாக வாழ இயற்கையாக கிடைக்கும் காய் கறிகளையும் பழங்களையும் உண்டு வாழ்ந்தாலே போதும். ஆனால் நடைமுறை வாழ்வில் தற்போது அனுபவித்து வரும் செயற்கையான வாழ்க்கையால் அவதிபடுவதுதான் மிச்சம்.
உடல் எடையை குறைப்பதில் நாம் தினமும் வீட்டில் பயன்படுத்தப்படும் பூண்டு எந்த அளவிற்கு உதவி செய்கிறது தெரியுமா ? இந்த கீழ்வரும் செய்முறையின் அடிப்படையில் பூண்டில் கஞ்சி செய்து தினமும் குடித்துவர, உடல் எடை மிக வேகமாகக் குறைய ஆரம்பிக்கும்.
பூண்டு கஞ்சி தயார் செய்யும் முறை:
தேவையான பொருள்கள்:
பூண்டு - 15 பல் (தோல் நீக்கப்பட்டது)
புழுங்கல் அரிசி - ஒரு கப் (வறுத்து, உடைத்தது)
சீரகம், மிளகு - தலா கால் டீஸ்பூன் (உடைத்தது)
வெந்தயக்கீரை - ஒரு கைப்பிடி அளவு
இந்துப்பு - தேவையான அளவு
மோர் - ஒரு கப்
தண்ணீர் - 4 கப்
செய்முறை:
உடைத்த புழுங்கல் அரிசி, பூண்டு, மிளகு, சீரகம், இந்துப்பு, வெந்தயக்கீரை, தண்ணீர் ஆகியவற்றை குக்கரில் சேர்த்து, மூடி 3 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் நன்கு மசித்து, மோர் சேர்த்து குடிக்கலாம். காலை, மாலை வேளைகளிலும் இதை சாப்பிடலாம்.
இதனை மதிய உணவில் நாம் இயல்பாகவே அதிக கலோரிகளை எடுத்துக் கொள்வோம். அதற்கு பதிலாக இந்த கஞ்சியைக் குடித்து வந்தால் பசியும் அடங்கும். குறைந்த கலோரியில் நிறைவான, சத்தான உணவைச் சாப்பிடவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நம் உடலில் அதிகரித்துள்ள கொழுப்பை ,அதிக அளவில் மெடபாலிசம் செய்து வெகுவாக குறைகிறது. அதுமட்டுமில்லாமல், ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்க செய்கிறது. புற்று நோய் வருவதை தடுகிறது. இது போன்ற பல நன்மைகள் இருக்கின்றது.
0 comments:
Post a Comment